ARTICLE

tamilArticle.com
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
    எல்லாரும் ஆண்டவரோடு கூட ஜெபத்தின் மூலமாக பேசுவோம். ஆனால் அவர் நம்மோடு பேசுவாரா? அவர் சத்தத்தை கேட்கமுடியுமா? என்ற கேள்விகளோடு இருப்பீர்களானால் நிச்சயம் நம் ஆண்டவர் நம்மோடு பேசுவார். வேதம் என்ன சொல்லுகிறது என்று பாருங்கள்.
என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. யோ 10:27
கிறிஸ்தவன் அல்லது அவரை பின்பற்றுகிறேன் என்று சொல்லுகிறவன் அவருடைய சத்தத்தை கேட்டு பின் செல்ல வேண்டும். அதுதான் தேவனுடைய திட்டமாக இருக்கிறது. அல்லேலுயா!.
வார்த்தை:
முதலாவது கர்த்தரின் வார்த்தையைக் குறித்து சற்று ஆழ்ந்து புரிந்து கொள்வோம்.
றீமா (Rhema)  மற்றும் லோஹோஸ் (Logos) என்ற இந்த இரண்டு கிரேக்க பதத்திற்கு தமிழில் ஒரே பதம் வார்த்தை (Word) என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் உண்மையான அர்த்தத்தை சரியாக புரிந்து கொள்வோமானால் நமக்கு சற்று எளிதாக காணப்படும்.
லோஹோஸ்:
வேதாகமத்தின் முழுபெகுதியும் லோஹோஸ் ஆகும். இது நாம் வழி விலகாமல் இருப்பதற்கு உதவும் ஒரு அளவுகோலாக இருக்கிறது. லோஹோஸ் என்றால் இருக்கிறதை இருக்கிற வண்ணமாகவே புரிந்து கொள்ளுதல். பொதுவாக சிலருக்கு வேதஅறிவு மிகவும் அதிகமாக இருக்கும். ஆனால் அது ஆவிக்குரிய ரிதியில் அவர்களுக்கு உதவியாக இருக்காது. ஆனால் நொறுக்கப்படுகிற சூழ்நிலையில் நாம் படித்த வார்த்தை நமக்குள் கிரியை செய்கிறது றீமா. இதை நாம் இப்பொழுது பார்ப்போம்.
றீமா:
ஒருகுறிப்பிட்ட சூழ்நிலையில் லோஹோஸ் என்ற கர்த்தரின் வார்த்தை நம்மோடு வெளிப்பட்டு அல்லது பேசப்பட்டு ஆவியில் ஒரு ஜீவன் உண்டாகிறது. அந்த சூழ்நிலையில் சந்தோஷத்தையும் ஒரு நம்பிக்கையும் தந்து அவரின் மேல் இன்னும் சார்ந்திருக்க உதவுவது தான் றீமா எனப்படும். இப்படிப்பட்ட றீமாவை பெறுகிறவர்கள் தான் கர்த்தர் என்னோடு பேசினார்; என்று உறுதிபட சொல்கிறார்கள்;. இப்பொழுது புரிந்து விட்டதா? கர்த்தர் நம்மோடு பேச வேண்டுமானால்.. வேதாகமத்தை படிக்கும்பொழுது றீமாவை பெற்றுக்கொள்ள வேண்டும்.
சத்தம் கேட்பதற்கு...
எனது நண்பன் ஜீவனிடம் சில தவறுகளை நான் பார்த்தேன். உடனே நான் அவரை அன்பாக அழைத்து நண்பா நீ செய்வது தவறு என்று சொன்னேன் அவனும் சரி சரி நான் திருத்திக்கொள்கிறேன் என்றான்.. நாட்கள் சென்றன… அதே தவறை மீண்டும் நான் அவனிடம் பார்த்து எனக்கு வருத்தத்தை உண்டு பண்ணியது. மீண்டும் அவனை அழைத்து அதை சுட்டிக்காட்டினேன்….ஆனால் மறுபடியும் அவன் அதே தவறை செய்தான்;.. இப்படியாக தவறுகள் தொடர்ந்தது.. அப்புறம் நான் அவனிடம் பேசுவதையே நிறுத்தி விட்டேன் விளங்கியதா! தேவனுடைய வர்த்தையை கேட்க வேண்டுமானால் ஆவியானவருக்கு கீழ்படிந்து அவருடைய வார்த்தைக்கு செவி சாய்த்து அதன்படி நடக்க வேண்டும்.
¨ பரிசுத்த வேதாகமம் நம்முடைய வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற வேண்டும்.
¨ ஆவியானவர் அதை கற்றுத் தரும்போது அதற்கு கீழ்படிய வேண்டும்.
 இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின் படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப் பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்து கொள்ளுவாய். யோசுவா 1:8
ஆண்டவர் நம்மோடு பேசுவதற்கு:
    1. ஆண்டவர் அவருடைய வார்த்தை மூலமாக நம்மோடு பேசுவார்.
    2. நம்முடைய ஆவியிலே (நம்முடைய சிந்தனை மண்டலத்தில்) நம்மோடு பேசுவார்.
    3. ஊழியக்காரர்கள் மூலமாக பேசுவார்.
    4. சூழ்நிலைகளின் மூலம் பேசுவார்.
    சூழ்நிலைகளின் மூலமாக பேசுவதை தவிர மீதி எல்லாவற்றிலும் கர்த்தர் தமது றீமா (Rhema) வார்த்தை மூலமாகவே பேசுவார். ஆகவே இந்த ஏட்டில் கர்த்தருடைய வார்த்தை மூலமாக ஆண்டவர் பேசுவதை பார்க்கப் போகிறோம்.
    பரிசுத்த வேதாகமத்தை புரிந்து கொள்ள தேவனுடைய ஞானம் நமக்கு தேவை (யாக் 1:5). தேவனே பரிசுத்த வேதாகமத்தின் ஆசிரியராக இருக்கிறபடியினால்,  
    அவரே நமக்கு கற்றுக்கொடுப்பார். நீங்கள் என்ன முறையில் வேதாகம் படிக்கிறீர்கள் அல்லது எங்கே ஆரம்பிக்கவேண்டும் என்பது ஒரு பொருட்டல்ல. நாம் கிறிஸ்தவன் என்ற நிச்சயம் இல்லாமல் அதாவது இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளாமல் பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு இல்லாமல் வேதாகமத்தை புரிந்து கொள்வது இயலாது.. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு வேதாகமத்தின் சத்தியம்  மறைபொருளாகவே இருக்கும். ஆனால் விசுவாசிக்கிறவர்களுக்கோ அது ஜீவனாக காணப்படும். (1 கொ 2:13-14, யோவான் 6:63)
    ஒரு சின்ன சம்பவத்தை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். எம்மாவு சீஷர்களிடத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வேதத்திலிருந்து வசனங்களை எடுத்து சொல்லும் போது, அந்த வார்த்தைகளை புரிந்து கொள்ள முடியவில்லை. அப்படியே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிந்து கொள்ளவில்லை. அதாவது அவர்கள் ஆவியில் தொடப்படவில்லை. ஆனால் அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்ட பின்பு அவரை அறிந்தார்கள்.
    அப்பொழுது அவர்கள் அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக் காட்டின பொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்து விட்டு எரியவில்லையா என்ற உணர்வு, அவர்கள் கண்கள் திறக்கப்பட்ட பிற்பாடு அந்த வார்த்தை கிரியை செய்ய ஆரம்பித்தது. ஆகவே நம்முடைய ஆவிக்குரிய கண்கள் திறக்கும் பொழுது தான். கர்த்தரின் வார்த்தை நமக்குள்ளாக கிரியை செய்யும். அல்லேலுயா! லூக் 24:32
எப்படி வேதாகமத்தை படிக்கலாம்?
உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுதும் அது என் தியானம். சங் 119:97
    ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து E.U  என்ற வாலிப ஊழியத்தை பயன்படுத்தி இந்து குடும்பத்திலிருந்த எனக்கு அவரை வெளிப்படுத்தினார். அப்படியாக அவரை என்னுடைய சொந்த இரட்சகராக ஏற்று அவரோடு நடக்க கர்த்தர் கிருபை செய்தார். ஆனால் அநேக நாட்கள் ஆலயத்திற்கு செல்ல முடியவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வேதத்தை எப்படி தியானம் பண்ண வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார். அது முதற்கொண்டு கர்த்தரின் சத்தத்தை கேட்க அந்த தியானம் மிகவும் எனக்கு உதவிற்று. அதை நான் உங்களோடு சுருக்கமாக பகிர்ந்து கொள்கிறேன்.
1. பொதுவாக எந்த தொந்தரவும் இல்லாத அமைதியிடத்தை தேர்ந்தெடுத்து வேதாகமத்தை பய பக்தியோடே வாசிக்க வேண்டும். புதிதாக படிப்பவர்கள் புதிய ஏற்பாட்டை தொடக்கத்திலிருந்து படிக்கலாம்.
2. பகுதி பகுதிகளாக எடுத்து வாசித்து தியானம் செய்வது நல்லது. உதாரணமாக  லூக் 19:1-10.
3. அந்த பகுதியை மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டும். முடியுமானால் வாயை திறந்து சற்று சத்தமாக படித்தால் நல்லது. அந்த வசனத்தில் கர்த்தர் உணர்த்துகிற பகுதியை அடிக்கோடிட்டுக் கொள்ளுங்கள். ஒருவேளை பாவமானால் விட்டுவிடவும், வாக்குதத்தமானால் உரிமை பாராட்டி கொள்ளுங்கள். அந்த வசனத்தை அந்த நாள் முழுவதும் உங்கள் மனதில் கொண்டு வாருங்கள். கர்த்தர் வெளிப்பாடுகளை கொடுத்துக் கொண்டே இருப்பார்.
வேதாகமத்தை படிப்பதற்கு அதிகமாக பயன்படுத்துகிற ஒரு முறையை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இந்த முறைக்கு பெயர் SPACE(ஸ்பேஸ்) எனப்படும். இப்படி வேதாகமத்தை படித்து தியானம் செய்வீர்களானால் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளரமுடியும். இதை நான் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். வேதாகமத்தை படித்த பிற்பாடு நீங்கள் படித்த பகுதியில் இப்படிப்பட்ட கேள்விகளை கேட்டு பாருங்கள்.




ஏதாவது பாவங்கள் அறிக்கை செய்ய வேண்டுமா? Is there a  Sin for me to confess?
ஏதாவது வாக்குதத்தங்கள் எனக்காக வைக்கப்பட்டுள்ளதா? Is there a Promise for me to Keep?
ஏதாவது நான் செயல் படுத்த வேண்டுமா? Is there an Action for me to take?
ஏதாவது கீழ்படியவேண்டிய கட்டளைகள் இருக்கிறதா? Is there a Command for me to obey?
ஏதாவது முன்மாதிரி எனக்காக வைக்கப்பட்டுள்ளதா? Is there an Example for me to follow?
  ஓவ்வொரு முறையும் கருத்தோடும் ஆவியானவர் உதவியோடும் வேதாகமத்தை படித்து தியானிக்கும் பொழுது கர்த்தர் நிச்சயமாக பேசுவார். தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!

அப்படியானாலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.லூக்11:28

“வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்து கொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது”. 2 தீமோ 3:16-17
tamilArticle.com
கல்லூரியில் விரிவுரையாளராக வேலைப் பார்க்கிறவர் தான் இந்த ஸ்டெல்லா. ஒரு ஜெபிக்கிற வேதம் வாசிக்கிற ஒரு பெண்மணி.. சின்ன சினன காரியங்களையும் தேவனோடு பகிர்ந்து கொள்கிற அனுபவம்.. அன்று அன்னாரின் ஜெபம்.. ஆண்டவரே! கல்லூரிக்கு போகிறேன் என்னோடு கூட வாங்க… ஆண்டவர் அவளோடு இருக்கிறார் என்ற விசுவாசத்தோடு நடந்து பேருந்து நிறுத்துமிடத்திற்கு வந்தார். என்றும் போல் அன்றும் 8.30 மணி பேருந்தை பிடிப்பதற்காக அனேக கூட்டத்திற்கு மத்தியில் இவர்களும் ஒருவராய் நின்று கொண்டிருக்க…. பேருந்து அதிக கூட்டமாக வந்த படியினால் இவர்களை எடுக்காமல் போய்விட்டது.. இயேசப்பா நீர் என்னோடு கூட இருக்;;கிறீர். ஆகவே அடுத்த வண்டியிலாவது என்னை அனுப்புவீர் என்று விசுவாசித்து ஜெபத்தோடு அந்த இடத்தில் காத்திருந்தார்கள்.. அங்கே 8.50 மணிக்கு வந்த பேருந்தும் அதிக கூட்டம்.. அந்த இடத்தில நிற்காமல் போனது… ஆண்டவரே நான் உம்முடைய பிளளை அல்லவா, ஏன் இப்படி ஆண்டவரே? என்று மீண்டும் ஆண்டவரோடு கூட பேச ஆரம்பித்தாள். ஆண்டவரே சீக்கிரமாக ஒரு வண்டியை அனுப்புங்கப்பா என்றாள்… பாருங்கள் சோதனையை 9.10 க்கு வந்த பேருந்திலும் இடம் கிடைக்கவில்லை.. கடைசியாக அதிக நேரம் ஆகிவிட்டதால் மிகுந்த சோர்வுடன் சோகத்தோடு வீடு திரும்பினார்.. அப்பொழுது அவளின் மனதுக்குள் ஏன் ஆண்டவரே நீங்கள் உதவி செய்ய வில்லை.. உம்முடைய மகளாகிய என்னுடைய சாட்சி கெட்டுப்போகிறதே என்று அவளுடைய இதயம் அழுதுகொண்டிருந்தது…
    பொதுவாக நாம் எல்லாருக்கும் இப்படிப்பட்ட சூழ்நிலைகள் வரும்போது ஆண்டவரிடததில் முறை யிடுவது சகஜம் தான். ஆனால் ஆண்டவர் நமக்கு தீமைசெய்பவரா?. என்ற கேள்வியை உங்கள் உள்ளத்தில் கேட்டு பார்ப்பீர்களானால் இல்லை என்றே பதில் வரும். சரி, இந்த அம்மா வீட்டில் மத்தியான நேரத்தில் செய்தியை பார்ப்பதற்கு தொலைக்காட்சியை திருப்பியதும் தலைப்பு செய்தி இவர்களை வியப்புற வைத்தது. அரசியல்வாதிகளுக்கிடையில் உள்ள பிரச்சனை காரணமாக.. அநேக பேருந்துகளை தீவைத்து கொளுத்தி விட்டனர். அதில் இவர்கள் தவற விட்ட அந்த மூன்று பேருந்துகளும் அடங்கும். அதில் அநேகர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். சிலர் மரித்து விட்டார்கள். அப்பொழுது தான் அவர்கள் அன்று காலையில் தியானித்த வசனம் ஞாபகத்திறகு வந்தது.. அன்றியும், அவருடைய தீர்மானத்தின் படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவாகளுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். ரோ 8:28
     ஆம் அருமையானவர்களே! சில நேரங்களில் சில சூழ்நிலைகள் நமக்கு சாதகமாக அமைவதில்லை என்று நாம் மனம் வருந்துகிறோம். தேவனுக்கு அது எப்படித் தெரியும்? உன்னதமானவருக்கு அதைப் பற்றி அறிவு உண்டோ? நான் விருதாவாகவே என் இருதயத்தைச் சுத்தம் பண்ணி, குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவினேன். நான் நாள்தோறும் வாதிக்கப்பட்டும் காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன் சங் 73:11-14 என்று புலம்புகிறோம். ஆனால் தேவனோ நமக்கு அதை நன்மையாக முடியப்பண்ணினார். ஆதி 50:20 நமக்கு நன்மை செய்ய நினைத்த தேவனை நாம் நம்முடைய வார்த்தையினாலும், சிந்தனைகளினாலும் அநேக நேரங்களில் துக்கப்படுத்தியிருப்போம். ஆகவே தேவனிடத்தில் மன்னிப்பு கேட்டு, சீர்பொருந்தி, தேவனுக்கு நன்றி செலுத்துவோமா! தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்.


tamilArticle.com


எனக்கு அருமையானவர்களே! கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய வாழ்வில் வந்திருக்கிறாரா? நான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேனா? என்ற கேள்வியோடு நீங்கள் இருக்கிறீர்களா!
¨ நாம் இரட்சிக்கப்பட்டு விசுவாசிகாளான போது நம்முடைய பாவங்களை மன்னிக்கப்பட்ட நிச்சயம் நமக்கு காணப்படும் (அப்10:43)
¨ மனந்திரும்புதலுக்கேற்ற கனிகள் நம்முடைய ஜீவிதத்தில் உண்டாகும். (மத்3:8)
¨ கர்த்தருடைய வார்த்தைகளை தியானிக்கும் பொழுது பரிசுத்த ஆவியானவர் நம்மடைய இருதயத்தை திறந்தருளுவார் (அப்16:14)
¨ நம்முடைய ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்டிருக்கும் (2கொரி 4:4)
¨ ஜீவ ஊற்று நம்மிடத்திலிருந்து புறப்பட்டுவரும். (யோ7:38)
¨ அப்பா பிள்ளை என்ற உறவு வரும் (யோ1:12)
¨ எதிர்காலம் மற்றும் பாதுகாப்பின் நிச்சயம் கிடைக்கும்






tamilArticle.com
கேரளத்தில் இடுக்கி மாவட்டம் ஒரு அருமையான வனம் நிறைந்த இடம். தேயிலை, ஏலம், காப்பி நல்ல மிளகு….அப்ப அப்ப.. இவை எல்லாம் வளர்ந்து பார்ப்போரை மயக்கும். ஆந்த அழகு மிக்க இடத்தில் கிட்டத்தட்ட  10 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு வசிக்கும் மக்களுக்கு பொழுது போக்கு சாதனம் வானொலிப்பெட்டிதான்… அதுவும் பேட்டரி கட்டை தீர்ந்தால் அவ்வளவுதான்...புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
மலையும், மழையும் நிறைந்த அந்த பகுதியில் இந்த பெட்டியின் சத்த்ததை கேட்க டியூணரை (Tuner)  மிகவும் கஷ்டப்பட்டு திருப்பி சரியான அலைவரிசையில் வைத்து அந்த சத்த்தை கேட்டபார்கள்.. அப்பொழுது அவர்கள் முகத்தில் ஒரு மகிழ்சி ததும்பும்….. திடீரென இடிமுழக்கங்களும் மழையும் வந்தால் அவ்வளவுதான்.. மீண்டும் அதோடு போராட வேண்டும்.
வானெலிப்பெட்டியின் சத்தத்தை கேட்க வேண்டுமானால் அலைவரிசை(wave length)  சரியாக வைக்கும் பொழுதுதான் நம்முடைய காதுகள் சத்ததை கேட்கமுடியும் அல்லது அன்னிய சத்தம் தான் (Cross Talk) நம் காதை எட்டும்.
 நாள்தோறும் எத்தனையொ சத்தங்கள் கேட்டுகிறோம்….எல்லாம் என்ன சத்தங்கள்!! நாமும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகிறோம்.
 
நம்மை படைத்த ஆண்டவரிடம் (இயேசு கிறிஸ்துவிடம்) இருந்து வரும் சத்தம் நமக்கு ஜீவனையும் சமாதானத்தையும் கொண்டுவரும்.
 
சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே.  யோவா-6:68
 
     ஹலோ! தேவசத்தம் கேட்போமானால் அவர் நமக்குப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழியை நமக்குக் காட்டுவார் நம்மேல் அவர் கண்ணை வைத்து, நமக்;கு ஆலோசனை சொல்லுவார்.
 
ஆமா ஆமா…பாருங்க!! உலகத்தை படைத்த ஆண்டவரின் சத்த்தை கேட்கவேண்டுமானால் நாமும் கொஞ்சம் டியுண் (tune) பண்ணப்படவேண்டும்… அப்பொழுதுதான் கர்த்தரின் ச்த்தை கேட்கமுடியும்
 
    சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார்.யோவா-18:37
 
    என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது நான் அவைகளை     அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. யோவா-10:27
 
பரிசுத்தமும், கீழ்படிதலும் இருக்கும்பொழுது தேனினிமையிலும் மதுரமான தேவ சத்தம் உங்கள் காதுகளில் தொனித்து நெருக்கமான சூழ்நிலைகளில் விசாலமான இடதத்தில் கொண்டு நிறுத்தி, நீதியின் பாதையில் நடத்தி தேவ ராஜ்யத்திற்கு நேராக உங்களை அழைத்துச் செல்லும்..
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.
நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.
ஏசா-30:21

No comments:

Post a Comment